என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காவல் நீட்டிப்பு
நீங்கள் தேடியது "காவல் நீட்டிப்பு"
குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்தி நீதிபதி உத்தரவிட்டார். #Gutka
சென்னை:
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் 6 பேரும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஜவகர் உத்தரவிட்டார். #Gutka

1400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய ஊழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #Pakistanhousingscam #Shahbazsharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். அவரது விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் ஷாபாஸ் ஷரிப் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதியின் முன்னர் ஆஜரான ஷாபாஸ் ஷரிப், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நான் பலகோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறேன். இதுவரை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளால் என்மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரத்தையும் உருவாக்க முடியவில்லை என கூறினார்
ஷாபாஸ் ஷரிப்பிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்குமாறு அரசுதரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும், ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவலை வரும் 30-ம் தேதிவரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி நஜமுல் ஹஸன் உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் காவலை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam
சென்னை:
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சினிவாசராவ், உமாசங்கர், நவநீதகிருஷ்ண பாண்டியன், செந்தில் முருகன், சிவகுமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களது நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காக, அவர்கள் அனைவரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. #BishopFrancoMulakkal
கோட்டயம்:
கேரள மாநில கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக பேராயர் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர். இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்தநிலையில், பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து பாலா நகரில் உள்ள சிறைச்சலையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.
இதற்கிடையே கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BishopFrancoMulakkal

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு வருகிற 14-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் இன்று விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் 3 பேருக்கும் வருகிற 14-ந்தேதி வரை காவலை நீடித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviCase

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கடந்த 26-ந் தேதி கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வேல்முருகன் சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வேல்முருகனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து விழுப்புரத்துக்கு தனி வேனில்பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிபதி லதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனை சென்னைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடைய வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்து வரும் தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு திரண்டனர். வேல்முருகனை விடுதலை செய்ய கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #velmurugan

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமி காவல் ஜூன் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
மாணவிகளை பாலியல் விவகாரத்தில் அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முருகன், கருப்பசாமி ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 11-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். #NirmalaDevi #Murugan #Karuppasamy

×

X